Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 24 ஏப்ரல் (ஹி.ச.)
நர்சம்பேட் ஆர்டிசி டெப்போவில் பணியாற்றிய டிரைவர் சங்கர் கவுட் மரணம் குறித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆழ்ந்த அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,
மிகவும் துயரமளிப்பதாக குறிப்பிட்ட அவர், மரணமடைந்த சங்கர் கவுடின் குடும்பத்திற்கு அரசு முழுமையான ஆதரவு அளிக்கும் என்றும், அனைத்து வகையிலும் உதவி செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார்.
அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை தெரிவித்ததுடன், குடும்பத்தினருக்கு மன உறுதி கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு கண நேர உணர்ச்சியில் எடுக்கப்பட்ட முடிவு, ஒரு குடும்பத்தை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று வருத்தம் தெரிவித்தார்.
ஆர்டிசி தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க மாநில அரசு நேர்மையான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் நல்ல தீர்வு காணப்படும்.
தற்போதைய சூழ்நிலையில் தொழிலாளர்கள் யாரும் அவசரமாகவும், உணர்ச்சிவசப்பட்டும் எந்த முடிவுகளும் எடுக்க வேண்டாம் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி கேட்டுக் கொண்டார்.
தொழிலாளர்களின் பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்க அரசு உறுதியாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA