Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஏப்ரல் (ஹ.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்பான விவரங்களை சரிபார்க்கும் பணி மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள் 17சி படிவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் படிவத்தின் பிரதிகள், சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் முகவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
17சி படிவத்தில் உள்ள தகவல்கள் மற்றும் ஒவ்வொரு தொகுதியிலும் மொத்தமாக பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தச் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருவதாகவும், இன்று மாலைக்குள் முழுமையாக நிறைவடையும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தப் பணி நிறைவடைந்த பிறகு, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் பதிவான மொத்த வாக்குகள் தொடர்பான விரிவான புள்ளிவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P