Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச)
தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு, கடந்த மார்ச் 15ம் தேதி வெளியானது. உடனே, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பிரசாரங்களில் தலைவர்கள் இறங்கினர்.
ஏப்ரல் மாதம் முதல் அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்தனர்.
தமிழக முதல்வரும், துணை முதல்வரும், திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், ஏப்ரல் 21 ஆம் தேதியுடன் பிரசாரங்கள் நிறைவு பெற்று நேற்று தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிவடைந்தது.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 85 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இது வரலாறு காணாத சாதனை என்றும் கூறப்படுகிறது.
தற்போது தேர்தல் முடிந்ததும், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்லவும், ஓட்டு எண்ணிக்கைக்கு ஓரிரு நாள் முன்னதாக தொகுதிகளுக்கு திரும்பவும் திட்டமிட்டுள்ளனர்.
அந்த வகையில் இன்று காலை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் சென்னை விமான நிலையம் வந்தார்.
அவர் வெளிநாடுக்கு செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துபாய், லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு துணை முதல்வர் உதயநிதி, அவரது மனைவி, மகளுடன் இன்று காலை புறப்பட்டு சென்றார்.
முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் நாளை (ஏப்ரல் 25) கொடைக்கானலுக்கு செல்விருப்பதாகக் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b