Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஏப்ரல் (ஹி.ச)
தமிழகத்தில் நேற்று சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. எஸ்.ஐ.ஆர், பணிகளுக்கு பின், நடந்த தேர்தலில், மொத்தமாக 85.03 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை 16 முறை சட்டசபை தேர்தல் நடைபெற்றுள்ளது.
இதில், 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 78.2 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் இதுவரை பதிவான அதிகப்படியான வாக்கு சதவீதமாக இருந்து வந்தது.
இந்நிலையில், தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் 85.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தேர்தலில் மொத்தமுள்ள 5.73 கோடி வாக்காளர்களில், 4.83 கோடி பேர் ஓட்டளித்து, தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர். கடந்த தேர்தலை விட கூடுதலாக 20 லட்சம் பேர் ஓட்டுப் போட்டுள்ளனர்.
தற்போது, தேர்தலில் பதிவான ஓட்டுகளை சரிபார்க்கும் பணி தொடங்கியது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் பதிவான ஓட்டுகள் குறித்த விபரங்கள் வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
17சி படிவத்தில் பதிவான விவரங்கள், மொத்தம் பதிவான ஓட்டுகளை ஒப்பிட்டு பார்த்து சரிபார்க்கப் படுகின்றன. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பார்வையாளர்கள் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் பதிவான ஓட்டுகளை சரிபார்க்கும் பணி இன்று மாலைக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரிபார்ப்பு பணி நிறைவடைந்த பிறகு தொகுதி வாரியாக பதிவான ஓட்டுகள் விபரம் இன்று மாலை அதிகாரப்பூர்வாக வெளியிடப்பட உள்ளது.
Hindusthan Samachar / vidya.b