ஆளுநர் அப்துல் நசீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி
விஜயவாடா ,25 ஏப்ரல் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச ஆளுநர் அப்துல் நசீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெங்களூருவில் இருந்து ஐதராபாத் செல்ல திட்டமிட்டிருந்த ஆளுநர், விமானம் தாமதமானதால் நள்ளிரவு கடந்த பிறகு சுமார் 2 மணியளவில் விஜயவ
A


விஜயவாடா ,25 ஏப்ரல் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச ஆளுநர் அப்துல் நசீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பெங்களூருவில் இருந்து ஐதராபாத் செல்ல திட்டமிட்டிருந்த ஆளுநர், விமானம் தாமதமானதால் நள்ளிரவு கடந்த பிறகு சுமார் 2 மணியளவில் விஜயவாடா வந்தடைந்தார்.

இதையடுத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், அவரை உடனடியாக தாடேப்பள்ளியில் உள்ள மணிபால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவருக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அகற்ற அறுவை சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், முக்கிய பணிகள் உள்ளதால் அறுவை சிகிச்சையை பின்னர் மேற்கொள்வதாக ஆளுநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சிகிச்சைக்கு பின் உடல்நிலை சீராக இருந்ததால், ஆளுநர் அப்துல் நசீர் மருத்துவமனையில் இருந்து வெளியேறி, விஜயவாடாவில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA