Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச)
சென்னை நகரின் வடபழனி பகுதியில் உள்ள குமரன் காலனி 9வது தெருவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளியான காட்சிகளில், வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக் கொண்டிருந்ததை கண்காணித்த மர்ம நபர் ஒருவர், யாரும் கவனிக்காத நேரத்தை பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்து செல்போனை திருடிச் சென்றது பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே வீட்டில் சுமார் 8 மாதங்களுக்கு முன் ரூ.80,000 மதிப்புள்ள லேப்டாப் திருடப்பட்ட சம்பவமும் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஒரே இடத்தில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ