கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு – 5 கிமீ போக்குவரத்து நெரிசல்
திண்டுக்கல்25 ஏப்ரல் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கோடை சீசன் மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள
போக்குவரத்து நெரிசல்


திண்டுக்கல்25 ஏப்ரல் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

கோடை சீசன் மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று கொடைக்கானலுக்கு திரண்டுள்ளனர்.

இதன் காரணமாக வத்தலகுண்டு – கொடைக்கானல் பிரதான சாலைகளான செண்பகனூர், சீனிவாசபுரம், மூஞ்சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளி முதல் ஏரி வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாகனங்கள் மெதுவாக நகரும் சூழல் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நெரிசல் காரணமாக சுற்றுலா பயணிகள் தங்கள் திட்டமிட்ட நேரங்களில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல், தங்கும் விடுதிகளையும் அடைய முடியாமல் சாலைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

மேலும், பிரதான சாலைகளின் ஓரங்களில் உள்ள உணவகங்கள், சாக்லேட் கடைகள் மற்றும் தங்கும் விடுதிகளில் போதுமான வாகன நிறுத்த வசதி இல்லாததால், சாலையோரங்களில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவது நெரிசலை மேலும் அதிகரிக்கிறது.

கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், கொடைக்கானலில் கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமிக்கவும், சாலையோரங்களில் தவறாக வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam