ராஜஸ்தானில் உலோக கழிவு கிடங்கில் பயங்கர தீ விபத்து - 2 சிறுமிகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு
நீம்ரானா, 25 ஏப்ரல் (ஹி.ச.) ராஜஸ்தான் மாநிலம் நீம்ரானா பகுதியில் உள்ள உலோக கழிவு கிடங்கில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 சிறுமிகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் சத்வீர் சிங் கூறுகையில், உயிரிழந்தவர
Massive Fire at Metal Scrap Yard


நீம்ரானா, 25 ஏப்ரல் (ஹி.ச.)

ராஜஸ்தான் மாநிலம் நீம்ரானா பகுதியில் உள்ள உலோக கழிவு கிடங்கில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 சிறுமிகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் சத்வீர் சிங் கூறுகையில்,

உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் தொழிலாளர்கள் மற்றும் இரண்டு பேர் சிறுமிகள் என்றார்.

இரவு வெகு நேரம் வரை மீட்புப் பணிகள் நீடித்தன.

அவசரகால மீட்புக் குழுவினரின் தீவிர முயற்சிக்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

கழிவு கிடங்கின் சட்டபூர்வமான தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ள அதிகாரிகள் அது குறித்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

கிடங்கின் செயல்பாடுகளில் வழக்கத்திற்கு மாறாக விதிமீறல்கள் எதுவும் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து மேல் விசாரணை நடத்தப்பட உள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b