புதிய கட்சியை தொடங்கினார் - சந்திர சேகர ராவ் மகள் கவிதா
தெலுங்கானா, 25 ஏப்ரல் (ஹி.ச.) தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவின் மகள் கவிதா பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியில் சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். இவர் டெல்லி மதுபான உஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானார். இந்த நிலையில் கடந்த ஆண்டு உள்
கவிதா


தெலுங்கானா, 25 ஏப்ரல் (ஹி.ச.)

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவின் மகள் கவிதா பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியில் சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்.

இவர் டெல்லி மதுபான உஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானார். இந்த நிலையில் கடந்த ஆண்டு உள்கட்சி பூசல் காரணமாக கவிதா அவருடைய தந்தை சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து கவிதா தனியாக அமைப்பு ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். இந்த நிலையில் அவர் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவர் இன்று வெளியிட்டார்.

முனிராபாத்தில் உள்ள ஒரு அரங்கில் கவிதா தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார். கட்சியின் பெயரை தெலுங்கானா ராஷ்டிர சேனா (டிஆர்எஸ்) என கவிதா அறிவித்தார். இதன் மூலம், தெலுங்கானா மண்ணில் மற்றொரு புதிய அரசியல் கட்சி உருவாகியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய கவிதா,

கடின உழைப்பின் மூலம் தெலுங்கானாவில் ஒரு புதிய அரசியல் சக்தி உருவெடுத்துள்ளது. இது என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.

மாநிலத்தின் எதிர்காலத்திற்காக அனைவரும் பங்கேற்க வேண்டும்.

பல இன்னல்களைச் சந்தித்த பிறகும் தெலுங்கானாவிற்காக போராடியதாக அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P