சைதாப்பேட்டையில் தேர்தல் நாளில் அமைச்சர் முன்னிலையில் மோதல் – திமுக, தவேகவினர் மீது வழக்கு பதிவு
சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை நகரில் சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட 46வது வாக்குச்சாவடி அருகே தேர்தல் நாளில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பினர்மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலையில், த.வெ.க. சார்ந்த
Jn


சென்னை, 25 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை நகரில் சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட 46வது வாக்குச்சாவடி அருகே தேர்தல் நாளில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பினர்மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலையில், த.வெ.க. சார்ந்த வழக்கறிஞர் செந்தமிழ்ச்செல்வன் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட திமுகவைச் சேர்ந்த 10 பேர்மீது குமரன் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தாக்குதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, திமுகவினர் அளித்த புகாரின் பேரில், த.வெ.க. வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன், ராமகிருஷ்ணன், சேதுராமன் உள்ளிட்டோர்மீதும் தாக்குதல் மற்றும் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் எதிர்வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ