உத்தரப் பிரதேசத்தில் காருடன் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
லக்னோ, 25 ஏப்ரல் (ஹி.ச.) உத்தரப் பிரதேச மாநிலம் பர்சத்பூர் அகிரானி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3:00 மணியளவில் ஸ்கார்பியோ கார் கட்டுப்பாட்டை இழந்து, தனது பாதையை விட்டு எதிர்ப் பாதைக்குள் நுழைந்து, எதிரே வந்த டிரெய்லர் லாரியுடன் பயங்கரமாக மோதி
car and a truck in Uttar Pradesh


லக்னோ, 25 ஏப்ரல் (ஹி.ச.)

உத்தரப் பிரதேச மாநிலம் பர்சத்பூர் அகிரானி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3:00 மணியளவில் ஸ்கார்பியோ கார் கட்டுப்பாட்டை இழந்து, தனது பாதையை விட்டு எதிர்ப் பாதைக்குள் நுழைந்து, எதிரே வந்த டிரெய்லர் லாரியுடன் பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது.

விபத்து நடந்த இடத்தில் உடனடியாக உள்ளூர் மக்கள் திரண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தோஹ்ரிகாட் போலீசார், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.

சட்ட நடைமுறைகளுக்குப் பின், அனைத்து உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக மவு மாவட்ட மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

உயிரிழந்தவர்கள் கோரக்பூர் மாவட்டம், கோராபார் காவல் நிலையத்திற்குட்பட்ட ராணிதிஹா கிராமத்தைச் சேர்ந்த வினய் ஸ்ரீவஸ்தவா, 53, இவர் மறைந்த தாகூர் ராமாஷங்கர் லால் ஸ்ரீவஸ்தவாவின் மகன் ஆவார். அவரது மகன் கிருதார்த் ஸ்ரீவஸ்தவா, 27, மற்றும் மனைவி அர்ச்சனா ஸ்ரீவஸ்தவா, 48, ஆகியோரும் உயிரிழந்தனர்.

மேலும், பீகார் மாநிலம் கயா மாவட்டம், மோகன்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட மதிஹானி கிராமத்தைச் சேர்ந்த நந்த்லாலின் மகன் ரவீந்திர யாதவ், 20, மற்றும் ராம்பியாரே யாதவின் மகன் புருஷோத்தம் குமார், 28, ஆகியோரும் இந்த விபத்தில் பலியாகினர்.

ராஞ்சியில் நடைபெற்ற தங்கள் மகளின் திருமணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் இந்த விபத்து நேரிட்டதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b