மே 4 க்குப் பிறகு ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் – செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை
திண்டுக்கல், 26 ஏப்ரல் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் வழிபாடு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பி.கே. சேகர்பாபு, தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்தார். மேலும் அவர் செய்தியாளர
சேகர்பாபு


திண்டுக்கல், 26 ஏப்ரல் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் வழிபாடு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பி.கே. சேகர்பாபு, தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்தார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

வருகின்ற மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் மு.க. ஸ்டாலின் மீண்டும் தமிழக முதலமைச்சராக பதவியேற்பார்.

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்ற குரல் அங்கு ஒலிக்கும்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

மேலும், வாக்கு சதவீதம் அதிகரித்தது குறித்து அவர் கூறுகையில், “2021 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது இம்முறை வாக்குப்பதிவில் பெரிய மாற்றம் இல்லை. அதனால் தேர்தல் முடிவுகளில் எந்த

மாற்றமும் இருக்காது.

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும்” எனக் குறிப்பிட்டார்.

Hindusthan Samachar / GOKILA arumugam