வால்பாறையில் இயற்கை காட்சிகளை கண்டு மகிழ குவிந்த சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்
கோவை, 26 ஏப்ரல் (ஹி.ச.) கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஏழாவது சொர்க்கம் என்று அழைக்கப்படும் இந்த வால்பாறை பகுதி 40 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. ஆழியார் மற்றும் அட்டகட்டி தாழ்வான பகுதியில் இருந்து சுமார் 1500 மீ உயரம் கொண்ட வால்பாறை பகுதியை ச
Valparai


கோவை, 26 ஏப்ரல் (ஹி.ச.)

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஏழாவது சொர்க்கம் என்று அழைக்கப்படும் இந்த வால்பாறை பகுதி 40 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது.

ஆழியார் மற்றும் அட்டகட்டி தாழ்வான பகுதியில் இருந்து சுமார் 1500 மீ உயரம் கொண்ட வால்பாறை பகுதியை சுற்றி பார்ப்பதற்கு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மாநிலம் மற்றும் வெளிநாட்டவர் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் இன்று காலை ஈட்டியார் எஸ்டேட் அருகில் அதிகாலை வேளையில் வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் காட்சியளித்த பனிமூட்டம் அங்குள்ள சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது.

மேலும் வால்பாறை பகுதியில் உள்ள கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் வறட்சி காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் உள்ள ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்நிலையில் வால்பாறையை ஒட்டி உள்ள வாட்டர் ஃபால்ஸ் எஸ்டேட் பகுதியில் இயற்கை காட்சிகளுக்கு பெயர் போன இந்த இடம் வெளிநாடுகளிலும் பெயர் சொல்லும் அளவிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த (famous) சுற்றுலாத்தலமாக காணப்படுகிறது.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சுமார் 45 கிலோமீட்டர் தொலைவை பயணம் செய்த பின்னர் அங்கு ஒரு ரெஸ்ட் எடுத்து தான் செல்ல வேண்டும். வாட்டர்ஃபால் எஸ்டேட்டில் உள்ள இயற்கை காட்சி அவர்களை வருக வருக என வரவேற்கின்றது.

இதனால் அப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் போட்டோ செல்ஃபி எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர். மேலும் வால்பாறை பகுதிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருப்பதால் இங்கு வரும் கூட்டம் வால்பாறையிலே முகாமிட்டு செல்கின்றனர்.

இதனால் வால்பாறை பகுதியில் உள்ள ஓட்டல்கள், ஹோம் ஸ்டே, பேக்கரி, ஹோம்மேடு சாக்லேட், டீத்தூள், மிளகு உள்ளிட்ட விற்பனை நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN