Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 26 ஏப்ரல் (ஹி.ச.)
சிபிஎஸ்இ -யால் 2026-27 ஆம் ஆண்டிற்கான பாடத்திட்டத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2026-27 கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பில் இம்முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இப்பாடத்திட்டத் திட்டத்தின்படி, பல பள்ளிகள் ஏற்கனவே இதை நடைமுறைப்படுத்தும் பணிகளைத் தொடங்கிவிட்டதாகத் தெரியவருகிறது.
ஒரு பள்ளி 6-ஆம் வகுப்பில் அறிமுகப்படுத்தும் மூன்று மொழிகள் மட்டுமே, அப்பள்ளிக்குரிய 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளிலும் விருப்பத் தேர்வுகளாகக் கிடைக்கும் எனவும் சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.
புதிய மும்மொழிக் கொள்கை ஒரே ஒரு வெளிநாட்டு மொழியை மட்டுமே அனுமதிப்பதால், இந்த கல்வியாண்டில் பல சிபிஎஸ்இ பள்ளிகள் பிரெஞ்சு மொழியை நீக்கியுள்ளன. அந்த இடத்தை ஆங்கிலம் நிரப்புகிறது.
அந்த வகையில் புதுச்சேரியில் 2026-27 கல்வியாண்டில் இருந்து சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கப்பட்டுள்ளது.
புதிய மொழிக் கொள்கை ஒரு வெளிநாட்டு மொழியை மட்டுமே அனுமதிப்பதால் இம்மொழி நீக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
2ம் மொழியாக பிரெஞ்சை தேர்வு செய்த மாணவர்கள் ஏற்கனவே பயின்ற மொழிக்கே மீண்டும் மாறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்மொழிக் கொள்கையின் கீழ் சிபிஎஸ்இ பள்ளிகளிலிருந்து பிரெஞ்சு நீக்கப்பட்டால், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பிரெஞ்சு பயின்று, தற்போது தொடர்ச்சியின்மையை எதிர்கொள்ளும் மாணவர்கள்? தனியார் பள்ளி பிரெஞ்சு ஆசிரியர்கள் வேலை இழப்பைச் சந்திப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என கல்வியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதற்கிடையில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சார்பில் அவரது பெற்றோருக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில்,
அன்பிற்குரிய பெற்றோர்களே இந்த கல்வி ஆண்டு முதல் (2026-2027), 5 மற்றும் 6-ஆம் வகுப்புகளுக்கு இரண்டாம் மொழியாக தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகள் மட்டுமே வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இரண்டாம் மொழியாக பிரெஞ்சு மொழியைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள், 4-ஆம் வகுப்பில் தாங்கள் பயின்ற இரண்டாம் மொழிக்கே மீண்டும் மாறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b