Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 26 ஏப்ரல் (ஹி.ச.)
ஆரிய சமாஜத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பண்டிட் குருதத்த வித்யார்த்தி 1864ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி பாகிஸ்தானின் முல்தான் நகரில் பிறந்தார்.
லாகூரில் லாலா ஹன்ஸ்ராஜ், லாலா லஜபதி ராய் இவருடைய நெருங்கிய நண்பர்கள்.
இவர் அறிவியலில் நாட்டம் கொண்டிருந்ததால் அனைத்தையும் அறிவியல் அடிப்படையிலேயே அலசிப் பார்ப்பார்.
இவருக்கு இறைவன் குறித்த வலுவான சந்தேகம் இருந்து வந்தது. சுவாமி தயானந்த சரஸ்வதிக்கு பிரியமான சீடரானார்.
பெரும் பண்டிதராக போற்றப்பட்ட போதிலும், மிகுந்த அடக்கத்தோடு தன்னை 'வித்யார்த்தி'(மாணவன்) என்றே கூறிக்கொள்வார்.
இவரின் 'எ டெர்மினாலஜி ஆஃப் தி வேதாஸ்' என்ற ஆய்வுக் கட்டுரை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக சமஸ்கிருதப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது.
அறிவைத் தேடுவதிலும், பரப்புவதிலும், சமூக சேவைகளிலும் ஈடுபட்டு, சமூக சிந்தனையால் மகத்தான பல சாதனைகளை நிகழ்த்திய பண்டிட் குருதத்த வித்யார்த்தி 1890ஆம் ஆண்டு மறைந்தார்.
Hindusthan Samachar / Durai.J