ராஜஸ்தானில் ரூ.150 கோடி வளர்ச்சித் திட்டங்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அடிக்கல் நாட்டினார்
சங்கோட், 26 ஏப்ரல் (ஹி.ச.) ராஜஸ்தான் மாநில கோட்டா மாவட்டத்தின் சங்கோட் சட்டமன்றத் தொகுதியில் ரூ.150 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் ராஜஸ்தான் அமைச்சர் ஹீராலால் நகர் ஆகியோர் இன்று அடிக்கல் ந
ராஜஸ்தானில் ரூ.150 கோடி வளர்ச்சித் திட்டங்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அடிக்கல்  நாட்டினார்


சங்கோட், 26 ஏப்ரல் (ஹி.ச.)

ராஜஸ்தான் மாநில கோட்டா மாவட்டத்தின் சங்கோட் சட்டமன்றத் தொகுதியில் ரூ.150 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் ராஜஸ்தான் அமைச்சர் ஹீராலால் நகர் ஆகியோர் இன்று அடிக்கல் நாட்டினர்.

100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, பாலம் மற்றும் சாலைப் பணிகள் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓம் பிர்லா கூறுகையில்,

பிராந்தியத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

கோட்டா-பூந்தி மக்களவைத் தொகுதியில் ஒவ்வொரு வயலுக்கும் நீர், ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீர் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர் கிடைக்கும். மேற்பரப்பு நீர் மூலம் ஒவ்வொரு வயலுக்கும் தண்ணீர் சென்றடையும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியும் சாலை இணைப்பால் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் நீண்டகால நீர் பாதுகாப்பை உறுதி செய்வதையும், தொகுதி முழுவதும் இணைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டவை.

குறிப்பாக கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களின் அடிப்படை உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தப்படுகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

அடிக்கல் நாட்டு விழாவில் உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பகுதியின் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த அறிவிப்பை அப்பகுதி மக்கள் வரவேற்றனர்.

Hindusthan Samachar / vidya.b