ஜாதி – பணம் ஆதிக்கம் -2026 தேர்தல் மீது நாராயணன் திருப்பதி விமர்சனம்
சென்னை, 26 ஏப்ரல் (ஹி ச.) நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் ஜாதி, பணம் மற்றும் ஆள் பலம் முக்கிய காரணிகளாக இருந்ததாக, நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பணபலம் இல்லாமல் ஆள் பலம் இல்லை. ஜாதி
Narayanan


Hh


சென்னை, 26 ஏப்ரல் (ஹி ச.)

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் ஜாதி, பணம் மற்றும் ஆள் பலம் முக்கிய காரணிகளாக இருந்ததாக, நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

பணபலம் இல்லாமல் ஆள் பலம் இல்லை.

ஜாதி பலம் இல்லாமல் பணபலம் இல்லை என்ற நிலை தமிழக அரசியலில் உருவாகியுள்ளது.

ஜாதியை ஒழித்தோம் என கூறப்படும் தமிழகத்தில், ஜாதி இல்லையேல் அரசியல் இல்லை, அதிகாரம் இல்லை என்ற நிலை நிலவுகிறது என்று தெரிவித்தார்.

'திராவிட மாடல்’ எனப்படும் அரசியல் நடைமுறை கடந்த பல ஆண்டுகளாக ஜாதி அடிப்படையிலான அரசியலை ஊக்குவித்து வருகிறது என்றும், கட்சிகளில் பதவி வழங்குதல் முதல் ஆட்சியில் நியமனங்கள் வரை பல்வேறு நிலைகளில் ஜாதி பாதிப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

சமத்துவ சிந்தனைகளை முன்னிறுத்திய இராமானுஜர், சுப்பிரமணிய பாரதியார், சி. ராஜகோபாலாச்சாரி, பி.ஆர். அம்பேத்கர் போன்ற தலைவர்கள் வலியுறுத்திய சமத்துவக் கொள்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், “ஜாதி மற்றும் பணம் ஆகிய இரண்டும் தமிழக அரசியலில் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக மாறிவிட்டன” என்றும் நாராயணன் திருப்பதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ