Enter your Email Address to subscribe to our newsletters

ராஜ்கோட், 26 ஏப்ரல் (ஹி.ச.)
குஜராத் மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ராஜ்கோட் மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் களத்தில் உள்ளன.
வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு மையங்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இதில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ்பாய் திலாரா, இன்று 11-வது வார்டு வாக்குச்சாவடி அலுவலகத்தில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.
வாக்களிப்பதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ திலாரா கூறுகையில்
இன்று ராஜ்கோட் மாநகராட்சிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடியின் 'விக்சித் பாரத்' என்ற கனவை முன்னெடுத்துச் செல்வதில் ராஜ்கோட் மாநகராட்சி தேர்தல் மிகவும் முக்கியமானது.
எனவே, மக்கள் அனைவரும் திரளாக வந்து வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
என்று அவர் தெரிவித்தார்.
ராஜ்கோட் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஏப்ரல் 28-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்தத் தேர்தல் முடிவுகள், வரவிருக்கும் மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Hindusthan Samachar / vidya.b