கோடை வெயில் தாக்கத்தால் கோயம்பேடு சந்தையில் காய்கறி வரத்து சரிவு – விலை ஏற்றம்
சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச) சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தையில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக காய்கறி வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதனால், சந்தையில் காய்கறி விலைகள் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகம் மற்றும் அண்டை மாநிலங
Veg


சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச)

சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தையில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக காய்கறி வரத்து கணிசமாக குறைந்துள்ளது.

இதனால், சந்தையில் காய்கறி விலைகள் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்காக பெருமளவில் காய்கறிகள் இங்கு கொண்டு வரப்படுகின்றன.

வழக்கமாக தினமும் 8,000 முதல் 10,000 டன் வரை காய்கறிகள் வரத்து இருக்கும் நிலையில், தற்போது கடும் வெயில் காரணமாக அது பாதியாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

வரத்து குறைவின் விளைவாக, அனைத்து காய்கறிகளின் விலையும் கிலோவிற்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது.

தற்போது கேரட் மற்றும் தக்காளி கிலோ ரூ.40-க்கும், வெண்டைக்காய் ரூ.40 முதல் ரூ.50-க்கும், முருங்கைக்காய் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கோடை வெப்பம் தொடர்ந்து நீடித்தால், காய்கறி விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக சந்தை வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ