Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 26 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு , வாரவிடுமுறை கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர் சென்ற மக்கள், நாளை அலுவலலகங்களுக்குச் செல்ல வேண்டி இருப்பதால் தற்போது சென்னை நோக்கி திரும்பி வருகின்றனர்.
ஒரே நாளில் திருச்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சென்னையை நோக்கி பயணித்து வருகின்றனர்.
இதன் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் இன்று (ஏப்ரல் 26) காலை முதலே போக்குவரத்து நெரிசல் உருவானது.
குறிப்பாக திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு விரைவு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், கார்கள், மினி வேன்கள் சென்னை நோக்கி தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருக்கின்றன.
இதனால், சிங்கப்பெருமாள் கோவில் முதல் திருத்தேரி வரை வாகனங்கள் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தன. கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டருக்கும் அதிகமாக வாகனங்கள் மெதுவாக சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
அப்பகுதிகளில் பணியில் உள்ள போலீசாரும் போக்குவரத்து நெரிலை சீர்செய்து வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து வாகனங்கள் சென்னை நோக்கி வந்து கொண்டே இருப்பதால் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது.
Hindusthan Samachar / vidya.b