கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் நடைமேடை விவரங்கள் வெளியீடு
சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச.) ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் ஊர் திரும்புவதால் பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. அதே சமயம் ப
Platform Details Released


சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச.)

ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் ஊர் திரும்புவதால் பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது.

அதே சமயம் பயணிகள் நெரிசலைக் குறைப்பதற்காக, கூடுதலாகத் அரசு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள் புறப்படும் நடைமேடை விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நடைமேடை 5இலிருந்து ஆவடி (104A), கோயம்பேடு (104C), மாதவரம் (104F, 104M), மகாகவி பாரதி நகர் (104G), திரு.வி.க. நகர் (104T), செங்குன்றம் (104K) மற்றும் பெரம்பூர் (104P) ஆகிய பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நடைமேடை 6இலிருந்து கோயம்பேடு (70V), கவியரசு கண்ணதாசன் நகர் (170TX), சென்னை விமான நிலையம் (MAA1), ராயபுரம் (18A) மற்றும் தண்டையார்பேட்டை (B18) செல்லும் பேருந்துகள் புறப்படுகின்றன.

நடைமேடை 7இலிருந்து தீவுத்திடல் (21G) நோக்கிய பேருந்துகளும்,

நடைமேடை 8இலிருந்து திருவான்மியூர் (91, 95X), வேளச்சேரி (91R) மற்றும் அடையாறு பேருந்து நிலையம் (99X) செல்லும் பேருந்துகளும் செயல்படுகின்றன.

மேலும் நடைமேடை 9இலிருந்து வேளச்சேரி (51X) மற்றும் தியாகராய நகர் (51AX, V51) பகுதிகளுக்கும்,

நடைமேடை 10இலிருந்து குன்றத்தூர் (66K) மற்றும் பூவிருந்தவல்லி (66P) பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நடைமேடை 11இலிருந்து ஆவடி (202X, 206), திருவள்ளூர் (297) மற்றும் தாம்பரம் (55V) நோக்கிய பேருந்துகள் பயணிக்கின்றன.

இறுதியாக நடைமேடை 12லிருந்து திருப்போரூர் (515T), வாலாஜாபாத் (579K), திருப்பெரும்புதூர் (583K), மாமல்லபுரம் (515M), கோவளம் (515K) மற்றும் சோழிங்கநல்லூர் (555S) ஆகிய இடங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்தப் பேருந்துகள் வண்டலூர் உயிரியல் பூங்கா, பெருங்களத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் வழியாகச் செல்கின்றன

என சென்னை மாநகர போக்குவரத்துக் கழக தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b