தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் அப்டேட்..!
தமிழ்நாடு, 27 ஏப்ரல் (ஹி.ச.) நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 30-ஆம் தேதி முதல் மே 2-
மழை


தமிழ்நாடு, 27 ஏப்ரல் (ஹி.ச.)

நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வரும் 30-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் மேல் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதால், ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளிலும் மிதமான மழைக்கும், வரும் 30-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மே 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

மழையின்போது மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P