Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 27 ஏப்ரல் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூரில் உள்ள லத்துார் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தின் உள்ளே, வேளாண்மை துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், இ-சேவை மையம் உள்ளிட்ட அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இதனால் பலர் தங்களின் கோரிக்கைகளுக்கு மனு கொடுத்தல், விவசாயம் சம்பந்தமான பணிகள், மகளிர் குழுவினர் உள்ளிட்டோர் தினமும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள இரும்பு கேட் பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது. இதனால், இரவில் அத்துமீறும் மர்ம நபர்கள் மதுஅருந்துதல், கஞ்சா புகைத்தல் போன்ற தகாத வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
நாளுக்கு நாள் அவர்களது அட்ராசிட்டி அத்துமீறி நடப்பதாக பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால், பகல் நேரங்களில் அலுவலகத்திற்கு வரும் மக்கள் முகம் சுளிக்கின்றனர்.
எனவே, வெளிநபர்கள் வருவதை தடுக்கும் வகையில் புதிதாக இரும்புகேட் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூகநல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b