Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஏப்ரல் (ஹி.ச)
சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள நேப்பியர் பாலம் அருகில், கூவம் ஆற்றங்கரையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் திருவல்லிக்கேணி போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கு கிடந்த உடலை மீட்டனர். ஆரம்ப விசாரணையில், அந்த நபர் யார் என்பது உடனடியாக அடையாளம் காணப்படவில்லை என கூறப்படுகிறது.
பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மரணம் கொலையா, தற்கொலையா அல்லது விபத்தால் ஏற்பட்டதா என்பது குறித்து பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து, சம்பவத்திற்கு முன் அந்த நபர் அங்கு எப்படி வந்தார் என்பதையும் போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
விரைவில் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ