கூட்டுக்குடிநீர் திட்டத்தின் ராட்சத குழாய் உடைப்பு - ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம்
திருநெல்வேலி, 27 ஏப்ரல் (ஹி.ச.) திருநெல்வேலி மாநகரில் சுமார் 6 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக நெல்லை மாநகராட்சி சார்பில் மணப்படை வீடு, சுத்தமல்லி உள்ளிட்ட இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்ட
Massive Pipeline Burst in Integrated Drinking Water


திருநெல்வேலி, 27 ஏப்ரல் (ஹி.ச.)

திருநெல்வேலி மாநகரில் சுமார் 6 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக நெல்லை மாநகராட்சி சார்பில் மணப்படை வீடு, சுத்தமல்லி உள்ளிட்ட இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு, குடிநீர் இணைப்புகள் மூலம் நாள்தோறும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

தற்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் வீரவநல்லூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பாலம் அருகே, கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட ராட்சத குழாயில் இன்று காலை திடீரென உடைந்தது.

குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, அதிலிருந்த தண்ணீர் பல அடி உயரத்திற்கு பீய்ச்சியடிக்கிறது. பல மணி நேரமாக தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வருவதால், ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என்றும், குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b