Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 27 ஏப்ரல் (ஹி.ச.)
நீதிக்கட்சியின் முன்னோடியும், சமூகநீதிக் கொள்கைகளின் அடித்தளத்தை அமைத்த தலைவருமான சர் பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,
நம் வேரான நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்தநாள் இன்று.
மாநகராட்சி மன்றத் தலைமைப் பொறுப்பில் இருந்து சென்னையின் தொடக்கக்கால வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். எவர் மீதும் வெறுப்புணர்வைக் காட்டாத பண்பிற் சிறந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பார்ப்பனரல்லாதாரின் உரிமைகள், கல்வி வளர்ச்சி ஆகியவற்றுக்காக தியாகராயர் ஆற்றிய பணிகள்தான் இன்றும் நம்மை இயக்கும் திராவிட மாடலின் அடித்தளம்.
அந்தப் பயணம் மேலும் உறுதியோடு தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூகநீதி, கல்வி முன்னேற்றம் மற்றும் சமத்துவம் ஆகிய இலக்குகளை முன்வைத்து செயல்பட்ட பிட்டி தியாகராயரின் பங்களிப்பு, தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளது.
அவரது கொள்கைகள் இன்றளவும் திராவிட இயக்கத்திற்கும், தமிழக அரசின் வளர்ச்சிப் பாதைக்கும் வழிகாட்டியாக உள்ளன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P