Enter your Email Address to subscribe to our newsletters

மேற்கு வங்கம், 27 ஏப்ரல் (ஹி.ச.)
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளம் சட்டசபைக்கு ஏப்ரல் 23-ந்தேதி மற்றும் 29-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
அதன்படி முதல்கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு சதவீதம் மிக அதிக அளவில் இருந்தது.
முதல் கட்ட தேர்தலில் மேற்கு வங்காள வரலாற்றிலேயே இல்லாத வகையில் அதிகபட்சமாக 93.19 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.
அதாவது 3.36 கோடி வாக்காளர்களுக்கு மேல் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி இருந்தனர்.
அதிகபட்சமாக தட்சிண் தினாஜ்பூர் மாவட்டத்தில் 94.85 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
மேற்கு வங்காளத்தில் மீத முள்ள 142 தொகுதிகளுக்கான 2-வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (29-ந்தேதி) நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு நடைபெற்று வரும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரம் செய்து தீவிர ஓட்டுவேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பாரக்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,
நான் தென் இந்தியாவில் உள்ள பல கோவில்களுக்கு சென்று தெய்வங்களின் ஆசிர்வாதங்களை பெற்றேன். இந்த தேர்தலிலும் காளி கோவிலுக்கு செல்லும்போது அதே அனுபவத்தை உணர்ந்தேன்.
காளி தேவி எனக்கு புதிய சக்தியை கொடுத்துள்ளார். மேற்கு வங்காள மக்கள் மீது நான் ஆழ்ந்த பற்றுக் கொண்டு உள்ளேன். நான் வீட்டை விட்டு வெளியேறிய நாள் முதல் உங்கள் அனைவருடனும் இருப்பதில் மகிழ்ச்சியையும், அமைதியையும் காண்கிறேன். நீங்கள் தான் என் குடும்பம்.
கடந்த 40 ஆண்டுகளாக நான் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் பயணம் செய்து வருகிறேன். பா.ஜ.க.வில் இணைந்த பிறகு ஒரு தொண்டராக கட்சி என்னிடம் சொல்வதை எல்லாம் நான் செய்து இருக்கிறேன்.
தேர்தல் பொறுப்புகளை ஏற்று கொள்வ தும் இதன் ஒரு பகுதியாகும். மேற்கு வங்காள மக்களின் மனநிலையை உணர்ந்த வகையில் நான் பா.ஜ.க. அரசின் பதவியேற்பு விழாவின் போது மீண்டும் வருவேன்.
1857-ம் ஆண்டின் முதல் சுதந்திர போருக்கு பராக்பூர் வலிமை அளித்தது. இதே மண் இன்று மாற்றத்திற்கான பாதையை அமைத்து வருகிறது. இந்த தேர்தல் பிரசாரத்தில் இதுவே எனது கடைசி பொது கூட்டமாகும். மே 4-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பா.ஜனதா ஆட்சி பதவி ஏற்பு விழாவில் நான் நிச்சயமாக கலந்து கொள் வேன் என்ற முழுநம்பிக்கை இருக்கிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலையிலேயே என்னை வாழ்த்துவதற்காக திரண்டு வந்து இருப்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. ஒடிசா மற்றும் பீகாரை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் இந்த முறை தாமரை மலரும்.
மக்களுக்கு சேவை ஆற்றுவதும், பாதுகாப்பதும், காப்பாற்றுவதும் எனது பொறுப்பாகும், கடமையா கும். நாட்டின் முன்னேற் றத்திற்கு கிழக்கிந்தியாவின் வளர்ச்சி மிகவும் முக்கியமானது. மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்கான தொலை நோக்கு பார்வை திரிணாமுல் காங்கிரசிடம் இல்லை.
ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவை ரத்து செய்ததன் மூலம் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தீர்மானங்களில் ஒன்றை பா.ஜ.க. நிறைவேற்றி உள்ளது. மேற்கு வங்கா ளத்தில் அமைய உள்ள புதிய அரசு மாநிலத்தின் செழிப்பு குறித்த அவரது தொலை நோக்கு பார்வையை நிறை வேற்றும் அதோடு அகதிகள் பிரச்சி னைக்கு தீர்வு காணும்.
வேலை வாய்ப்பின்மை காரணமாக மேற்கு வங்கா ளம் பல வருடங்களாக இடம் பெயர்வு துயர்வை சந்தித்தது. எனவே இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதே பா.ஜனதா அரசின் முன்னு ரிமையாக இருக்கும். அவதூறுகளை வீசுவது, மிரட்டல் விடுப்பது, பொய்களை பரப்புவது மட்டுமே திரிணாமுல் காங்கிர சின் ஒரே யுக்தியாக உள்ளது இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P