Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 27 ஏப்ரல் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் காணப்படுவதால் வனப்பகுதியில் முழுவதும் வறட்சியாக காணப்படுகிறது.
இதனால் வனவிலங்குகள் உணவின்றி தவித்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 7 நாட்களில் முதுமலை வனப்பகுதிகளில் 3 யானைகள் உயிரிழந்துள்ளது.
குறிப்பாக கடந்த புதன்கிழமை முதுமலை வனப்பகுதிக்குட்பட்ட தெங்குமரஹாடா வனத்தில்
20 ம் தேதி ஒரு பெண் யானை உயிரிழந்தது. 25 ம் தேதி அதே முதுமலை வனப்பகுதியில் மாயார் நீர்வீழ்ச்சிக்கு செல்லக்கூடிய பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டியானை இறந்தது.
இதனையடுத்து இன்றும் முதுமலை வனப்பகுதியில் உள்ள சிங்காரா வனச்சரகத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கடந்த 7 நாட்களில் முதுமலை வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக உணவு நீர் இன்றி யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் வனத்துறையினரிடையே மட்டுமின்றி வனவிலங்கு ஆர்வலர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்ட வன பகுதிகளில் காட்டு தீ ஏற்பட்டு 2500 ஏக்கருக்கும் மேல் வன பகுதி எரிந்து சாம்பலாகி வரும் நிலையில், ஒரு புரம் யானைகள், கரடி போன்ற வன விலங்குகள் தொடர்ந்து வறட்சியினால் உயிர் இழந்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள வனத்துறையினர் செய்வதறியாது திணறி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN