மீண்டும் பற்றி எரியும் மும்பை தானே குப்பைக் கிடங்கு - புகை மண்டலதால் மக்கள் அவதி
கல்யாண், 27 ஏப்ரல் (ஹி.ச.) மும்பை தானே மாவட்டம் கல்யாண் நகரில் உள்ள ஆதார்வாடி குப்பைக் கிடங்கில் நேற்று இரவு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இரவு 8.30 மணியளவில் தீப்பிடித்ததில் வானளாவிய தீப்பிழம்புகள் எழுந்தன, பல கிலோமீட்டர் தொலைவிலிருந்தும் தெ
Mumbai-Thane Landfill Erupts in Flames


கல்யாண், 27 ஏப்ரல் (ஹி.ச.)

மும்பை தானே மாவட்டம் கல்யாண் நகரில் உள்ள ஆதார்வாடி குப்பைக் கிடங்கில் நேற்று இரவு பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

இரவு 8.30 மணியளவில் தீப்பிடித்ததில் வானளாவிய தீப்பிழம்புகள் எழுந்தன, பல கிலோமீட்டர் தொலைவிலிருந்தும் தெரிந்தன.

இது தொடர்பாக தீயணைப்பு அதிகாரி நாம்தேவ் சௌத்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

காலையிலும் இதே குப்பைக் கிடங்கில் தீப்பிடித்து அணைக்கப்பட்டது. மாலையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. தற்போது அணைக்கும் பணிகள் தொடர்கின்றன.

தகவல் கிடைத்ததும் ஆதார்வாடி தீயணைப்பு நிலையத்திலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

தீயின் தீவிரம் காரணமாக கல்யாண் டோம்பிவலி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

தீப்பிழம்புகளுடன் அடர்ந்த புகை மண்டலம் சுற்றுப்புறப் பகுதிகளை மூடியுள்ளது. இதனால் அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதி அடைந்தனர்.

தண்ணீர் விநியோகம் சீராக இருந்தால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என எதிர்பார்க்கிறோம் என தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.

தற்போது வரை எந்த உயிர்ச்சேதமும் பதிவாகவில்லை.

மகாராஷ்டிராவில் குப்பைக் கிடங்கு தீ விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன.

மும்பை காஞ்சூர்மார்க் குப்பைக் கிடங்கில் இருந்து வெளியாகும் மீத்தேன் வாயு மற்றும் மாசு குறித்து பம்பாய் உயர் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

மனித உயிர்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இல்லையெனில் குப்பைக் கிடங்கை மூட உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் கிரிஷ் குல்கர்னி, ஆர்த்தி சாத்தே அமர்வு தெரிவித்தது.

குப்பைக் கிடங்குகளில் ஏற்படும் தீ விபத்துகள் பெரும்பாலும் கோடைகால வெப்பம், மீத்தேன் வாயு உருவாக்கம் மற்றும் முறையற்ற கழிவு மேலாண்மை காரணமாக ஏற்படுகின்றன.

ஆதார்வாடி குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்துகள் நிகழ்வதால் சுற்றுவட்டார குடியிருப்புவாசிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b