Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஏப்ரல் (ஹி.ச)
சென்னை உயர்நீதிமன்றம் சைதாப்பேட்டை பகுதியில் உள்ள பவளவண்ணன் ரயில்வே சுரங்கப்பாதையில் நீர் கசிவு பிரச்சினை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தெற்கு ரயில்வே உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை பவளவண்ணன் ரயில்வே சுரங்கப்பாதையில் நீர் கசிவு காரணமாக சாலை எப்போதும் ஈரமாக இருந்து, வாகன விபத்துகள் ஏற்படுவதாகக் கூறி வழக்கறிஞர் சொக்கலிங்கம் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சுரங்கப்பாதையில் உள்ள குடிநீர் குழாய் சேதமடைந்ததால் நீர் கசிவு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, சேதமடைந்த குழாயை உடனடியாக சரிசெய்து, நீர் கசிவை தடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நீதிபதி அப்துல் குத்தூஸ், தெற்கு ரயில்வே, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ