Enter your Email Address to subscribe to our newsletters

மெதக், 27 ஏப்ரல் (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலத்திலுள்ள மெதக் மாவட்டத்திலிருந்து பழுது பார்ப்பதற்காக ஹைதராபாத் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து இன்று அதிகாலை மாசாய்பேட் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது,
இன்று அதிகாலை மெதக் மாவட்டம் மாசாய்பேட்டில், மெதக்கிலிருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து தீப்பிடித்தது.
பழுதுபார்க்கும் பணிக்காக ஹைதராபாத் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் மற்றொரு நபர் மட்டுமே இருந்தனர்.
தீப்பிடித்ததை உடனடியாகக் கவனித்த இருவரும் பேருந்திலிருந்து இறங்கிவிட்டனர்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒரு தீயணைப்பு வாகனம் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றார்.
இன்று அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்து முழுவதுமாக எரிவதற்குள் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததால், சாலையில் போக்குவரத்து பாதிப்பு தவிர்க்கப்பட்டது.
பேருந்தில் பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்கசிவு அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b