Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 27 ஏப்ரல் (ஹி.ச)
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும்
மே 4-ம் தேதி வெளியாகவிருக்கும் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது.
பிரபல நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை நிறுவி 2026 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களம் கண்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான நெல்லை மாநகர பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்து ஒன்றில் டிஜிட்டல் பெயர் பலகையில் தமிழக வெற்றி கழகம் என்று பெயர் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதை அந்தப் பேருந்தில் பின்னால் வந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார் அந்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.
இதுதொடர்பாக நெல்லை மண்டல போக்குவரத்து அதிகாரிகள் சம்பவம் குறித்து பேருந்து இயக்கிய ஓட்டுனர் மற்றும் நடத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் முடிந்து சில தினங்களை ஆன நிலையில் அரசு பேருந்து ஒன்றில் தமிழக வெற்றி கழகம் என்று டிஜிட்டல் பெயர் பலகையில் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Hindusthan Samachar / vidya.b