Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஏப்ரல் (ஹி.ச)
தமிழ்நாட்டில் நிலவும் கடும் கோடை வெப்பத்தால் மின்சார தேவையில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை சமாளிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில மின் சுமை ஒழுங்குமுறை மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு வெப்ப மின் உற்பத்தி, நீர்மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி ஆகியவற்றுடன் மத்திய மின்நிலையங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான
(Inter-State) மற்றும் மாநிலத்திற்குள் (Intra-State) மின்சார பரிமாற்ற ஒப்பந்தங்கள் (LTOA, MTOA, STOA) மூலம் தேவையான மின்சாரம் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிகரித்த வெப்பநிலையால் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் ஏர் கண்டிஷனர் பயன்பாடு அதிகரித்துள்ளது.
மேலும், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் நடைபெற்று வருவதால், மக்கள் இரவு நேரங்களிலும் அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பது காரணமாக மின்சார நுகர்வு மேலும் உயர்ந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையிலும், அதிகரித்து வரும் மின்சார தேவையை திறம்பட பூர்த்தி செய்ய தேவையான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக மின் சுமை ஒழுங்குமுறை மையம் உறுதியளித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ