ஏழை மக்களின் உயர்வுக்காக தொண்டாற்றிய பிட்டி தியாகராயர் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
சென்னை, 27 ஏப்ரல் (ஹி.ச) நீதிகட்சியின் நிறுவனர்களில் ஒருவரான பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதா
Udhayanidhi Stalin pays tribute.


சென்னை, 27 ஏப்ரல் (ஹி.ச)

நீதிகட்சியின் நிறுவனர்களில் ஒருவரான பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

நீதிக்கட்சியின் பெருமைக்குரிய தலைவர்களுள் ஒருவரான வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்த நாள் இன்று!

திராவிட மாடல் அரசின் சமூக பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.

நீண்டகாலம் மாமன்ற உறுப்பினராகவும், பின்னர் மாநகராட்சியின் தலைவராகவும் பணியாற்றி இன்றைய சென்னையின் நவீன வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்.

ஏழை - எளிய மக்களின் உயர்வுக்காக தொண்டாற்றிய பிட்டி தியாகராயர் அவர்களின் பணிகள் என்றென்றும் நிலைத்து இருக்கும்.

அவர் புகழ் ஓங்கட்டும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b