Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 27 ஏப்ரல் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி, உதகை, குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வனப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுத்தீ ஏற்படுகிறது.
இந்நிலையில் மசினகுடியில் உள்ள நீரேற்று நிலையம் அருகில் உள்ள வனப்பகுதியில் பகுதியில் திடீரென காட்டுதீ ஏற்பட்டது.
முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பகுதி என்பதால் வனவிலங்குகள் இந்த காட்டுத்தீ சம்பவத்தால் இடம் விட்டு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் அந்த பகுதியில் உள்ள மக்கள் வனப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதே போல் ஊட்டி அருகே உள்ள பார்சன்ஸ் வேலி மற்றும் பைகாரா வனப்பகுதிகளில் கடந்த 10 நாட்களாக காட்டுத்தீ தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது.
கோடை வெயிலின் தாக்கம் மற்றும் வறட்சி காரணமாக ஏற்பட்ட இந்த காட்டுத் தீயால் இதுவரை சுமார் 5,000 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தீ வேகமாக பரவி வருவதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் காற்றின் வேகம் காரணமாக தீயை முழுமையாக அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b