Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 28 ஏப்ரல் (ஹி.ச)
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கம், விமன்ஸ் சேவா டிரஸ்ட், காமராஜ் கல்லூரி ஐ.க்யூ.ஏ.சி மற்றும் காமராஜ் ஸ்டார்ட் அப் மையம் ஆகியவை இணைந்து பெண்களைத் தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில், ஐந்து நாட்கள் நடைபெறும் கோடைக்கால சிறப்புப் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளன.
பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்குத் தேவையான ஆறு முக்கியத் துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
கேக் தயாரித்தல், மீன் ஊறுகாய் தயாரித்தல், ஹெர்பல் சோப் தயாரித்தல் மற்றும் மிதியடி தயாரித்தல், மணப்பெண் அலங்காரம், அடிப்படை டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாகத் தொழிலை மேம்படுத்துவது குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
நேற்று முகாம் தொடங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக கேக் தயாரித்தல் குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
இந்தப் பயிற்சி முகாம் வரும் மே 1-ஆம் தேதி வரை, தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெற உள்ளது.
சுயதொழில் ஆர்வமுள்ள பெண்கள் பலரும் இந்தப் பயிற்சியில் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயன்பெற்று வருகின்றனர்.
இதற்கான விரிவான ஏற்பாடுகளைக் கல்லூரி நிர்வாகம் மற்றும் மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கம் செய்துள்ளன.
Hindusthan Samachar / vidya.b