Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 28 ஏப்ரல் (ஹி.ச.)
கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தை கடந்த 2025 நவம்பர் மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
10.10 கிமீ தொலைவுக்கு சுமார் 5 வருடங்களாக கட்டப்பட்ட இந்த மேம்பாலம் திறக்கப்பட்ட பின்னர் அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு குறைந்துள்ளது.
ஆனால் மேம்பாலத்தில் அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதனால் ஆங்காங்கே சின்ன சின்ன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
மேம்பாலத்தில் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக, கேமரா பொருத்தும் பணிகள் நடந்தன.
ஏ.ஐ தொழில்நுட்பத்தில் சுமார் 44 கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது.
ஏஐ கேமரா புதிய விதிகள்படி மேம்பாலத்தில் 60 கிமீ வேகத்தில் மட்டுமே வாகனங்கள் இயக்க வேண்டும்.
மேம்பாலத்தின் ஏறுதளம் மற்றும் இறங்குதளங்களில் 30-40 கிமீ வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும்.
கேமராக்களின் செயல்பாடு குறித்து கடந்த ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை பரிசோதனை நடத்தினார்கள்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில்,
அதிவேகம், ஹெல்மெட் அணியாதது, சீட் பெல்ட் அணியாமல் செல்வது உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் ஏஐ கேமராக்கள் மூலம் கண்டறியப்படும். வாகன எண், விதிமுறை மீறல் விபரங்களை மேம்பாலத்தில் உள்ள தகவல் பலகையில் காட்டப்படும்.
இவற்றை கண்காணிப்பதற்கான கட்டுப்பாட்டு மையம் பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் செயல்பட்டு வருகிறது.
ஏஐ தொழில்நுட்பத்தில் விதிமுறை, கண்காணிப்பு சார்ந்த தகவல்களை உள்ளீடு செய்து வருகிறோம்.
இவற்றை அடுத்த ஒரு மாதம் பரிசோதனை செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b