திரிணாமுல் எம்.பி. மிதாலி பாக் வாகன அணி மீதான தாக்குதலில் பாஜக-வுக்கு பங்கில்லை - பாஜக வேட்பாளர் திலீப் கோஷ் மறுப்பு
கரக்பூர், 28 ஏப்ரல் (ஹி.ச .) மேற்கு வங்க மாநிலத்தில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறும். இந்த நிலையில் ஆராம்பாக்கில் நடைபெற்ற அபிஷேக் பானர்ஜியின் பேரணியில் கலந்துகொள்ள சென்றுகொண்டிருந்த திரிணாமு
திரிணாமுல் எம்.பி. மிதாலி பாக் வாகன அணி மீதான தாக்குதலில் பாஜக-வுக்கு பங்கில்லை - பாஜக வேட்பாளர் திலீப் கோஷ் மறுப்பு


கரக்பூர், 28 ஏப்ரல் (ஹி.ச .)

மேற்கு வங்க மாநிலத்தில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறும்.

இந்த நிலையில் ஆராம்பாக்கில் நடைபெற்ற அபிஷேக் பானர்ஜியின் பேரணியில் கலந்துகொள்ள சென்றுகொண்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்.பி. மிதாலி பாக்கின் வாகன அணி மீது பாஜக தாக்குதல் நடத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) குற்றம்சாட்டியது.

இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த கரக்பூர் சதர் தொகுதி பாஜக வேட்பாளர் திலீப் கோஷ் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திலீப் கோஷ்,

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 29 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பாக அனுதாபம் தேடுவதற்காக அவர்களே இதையெல்லாம் செய்துகொள்கிறார்கள். நாங்கள் தாக்குதல் நடத்த வேண்டுமென்றால் பல இடங்களில் செய்திருக்க முடியும்.

எந்த தாக்குதலும் நடக்கக்கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம். மக்கள் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும். அதுவே மாற்றத்தை கொண்டுவரும் என்று கூறினார்.

தற்போது பாஜக-வின் மதுசூதன் பாக் வசமுள்ள ஆராம்பாக் தொகுதியை, 2021 தேர்தலில் டிஎம்சி வேட்பாளர் சுஜாதா மண்டலை 7,172 வாக்குகள் வித்தியாசத்தில்

(3.3 சதவீதம்) பாஜக கைப்பற்றியது.

2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு வரை இந்த தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் கோட்டையாக இருந்தது. 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் டிஎம்சி இந்த தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றது.

நடப்பு தேர்தலில், டிஎம்சி வேட்பாளர் மிதாலி பாக்கை எதிர்து பாஜக சார்பில் ஹேமந்த பாக் போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் பிதிகா பண்டிட் களமிறங்கியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b