மிசோரமில் கனமழை - அய்சால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
அய்சால், 28 ஏப்ரல் (ஹி.ச.) மிசோரம் மாநிலத்தில் கடந்த சில மணி நேரமாக பெய்த கனமழை காரணமாக அம்மாநில தலைநகர் அய்சால் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இன்று மூடப்படுவதாக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து மிசோரம் மாநில அரசு வெளியிட்டு
Heavy Rains in Mizoram


அய்சால், 28 ஏப்ரல் (ஹி.ச.)

மிசோரம் மாநிலத்தில் கடந்த சில மணி நேரமாக பெய்த கனமழை காரணமாக அம்மாநில தலைநகர் அய்சால் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இன்று மூடப்படுவதாக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இது குறித்து மிசோரம் மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

அய்சால் மாவட்டத்தில் கடந்த சில மணி நேரமாக பெய்த கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சேறு வழிந்தோடுதல், நிலச்சரிவு, பாறை விழுதல் மற்றும் பிற பேரிடர்கள் ஏற்படக்கூடும் என்பதால், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளையும் மூடுவது பொருத்தமானதாக கருதப்படுகிறது.

அய்சால் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்துப் பள்ளிகளும் 2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை அன்று மூடப்பட வேண்டும்.

என்று அந்த செய்திக்குறிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு இமயமலைப் பகுதி, வடகிழக்கு பீகார் மற்றும் வடகிழக்கு இந்தியா தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40-46 டிகிரி செல்சியஸ் அளவில் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்திருந்தது.

இப்பகுதிகளில் வெப்பநிலை 36 டிகிரி செல்சியசுக்கு கீழ் நீடிக்கிறது.

இந்த வானிலை முன்னறிவிப்பை முன்னிட்டு, வெப்பம் தொடர்பான நோய்களை எதிர்கொள்ள தயார்நிலையை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து சுகாதார நிலையங்களிலும் வெப்பத் தாக்க மேலாண்மை பிரிவுகளை செயல்படுத்துதல், போதுமான ஆம்புலன்ஸ் சேவைகளை உறுதி செய்தல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க முன்னெச்சரிக்கைகளை பரப்புதல் மற்றும் அமைச்சகத்தின் IHIP தளத்தில் வெப்பத் தாக்க பாதிப்புகளை நிகழ்நேரத்தில் பதிவு செய்தல் ஆகியவை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / vidya.b