காதல் திருமணம் செய்த மகள் பெப்பர் ஸ்பிரே அடித்து கடத்தல் - 5 பேர் கைது
கிருஷ்ணகிரி, 28 ஏப்ரல் (ஹி.ச) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி ராகவேந்திரா காலனி பகுதியில் உ.பியை சேர்ந்த வடமாநில குடும்பத்தினர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும்நிலையில் வடமாநில பெண்ணான கோவிந்த பிரியாவும், ஒசூர் வெங்கடேஷ் நகரை ச
Hosur Hudco Police Station


கிருஷ்ணகிரி, 28 ஏப்ரல் (ஹி.ச)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி ராகவேந்திரா காலனி பகுதியில் உ.பியை சேர்ந்த வடமாநில குடும்பத்தினர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும்நிலையில் வடமாநில பெண்ணான கோவிந்த பிரியாவும், ஒசூர் வெங்கடேஷ் நகரை சேர்ந்த சூரியா(26) ஆகிய இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு கோவிந்த பிரியா, சூரியாவுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்டு சூரியா வீட்டிலேயே குடியிருந்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த பெண்ணின் தாய், சகோதரர்கள் வீட்டை காலி செய்துக்கொண்டு உத்திர பிரேதசம் சென்றிருந்த நிலையில், நேற்று கோவிந்த பிரியாவின் அம்மா சகுந்தலா (55), அண்ணன் பிண்டு குமார் நாயக்(24), தம்பி ஆகாஷ்(19) கார் டிரைவர், வக்கீல் ரத்தோட் ஆகிய 5 பேர் சூரியா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர்.

சூரியா, கோவிந்த பிரியா உறவினரான மற்றொருவர் என மூவர் கண்களில் பெப்பர் ஸ்பிரே அடித்து, கோவிந்த பிரியாவை காரில் கடத்தி சென்றுள்ளனர்.

சூரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒசூர் ஹட்கோ போலிசில் அளித்த புகாரின் பேரில், ஹட்கோ போலிசார் லொக்கேசன் மூலம் கர்நாடகா மாநிலம் ராமோஹள்ளி பகுதியில் இருந்த கோவிந்த பிரியாவை மீட்டு, கடத்திய 5 பேரை கைது செய்து ஒசூர் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN