Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 28 ஏப்ரல் (ஹி.ச.)
மகாபாரதப் போரில் அரவான்(கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழாவில் திருநங்கைகளுக்கான மணமுடித்தலும், மறுநாள் தேரோட்டமும், தாலி அறுத்து அழுகளம் நிகழ்ச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூவாகம் கிராமத்தில் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவிலில் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா சாகை வார்த்தலுடன் கடந்த ஏப்ரல்
14-ம் தேதி தொடங்கியது.
இதைத் தொடர்ந்து திருநங்கைகளுக்கான அழகிப் போட்டிகள் விழப்புரம் மற்றும் உளுந்தூர்பேட்டையிலும் நடைபெற்றது.
இதையடுத்து திருநங்கைகள் திருமாங்கல்யம் ஏற்றுக்கொள்ளுதல்
(தாலி கட்டுதல்) நிகழ்ச்சி தற்போது துவங்கியுள்ளது.
தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் திருநங்கைகள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்த திருநங்கைகள், மணப்பெண் அலங்காரத்தில் வந்து கூத்தாண்டவர் கோயில் பூசாரிகள் மூலம் தாலி கட்டிக் கொண்டு வருகின்றனர்.
திருநங்கைகளின் வருகையையொட்டியும், கிராம மக்களின் வருகையையொட்டியும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆண்டு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b