இரட்டை இலக்க வளர்ச்சி,இந்தியாவின் கவனத்தை ஈர்த்த தமிழ்நாடு – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச.) தொடர்ந்து இரண்டாவது நிதியாண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து, இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாடு என மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்
Thangam Tenarasu


நான்


சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச.)

தொடர்ந்து இரண்டாவது நிதியாண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து, இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ்நாடு என மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எந்தத் தடையையும் தகர்த்து, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக நிலைநிறுத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையும் ஓய்வறியா உழைப்பும் தான் இந்தச் சாதனையின் அடிப்படை காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொழில் வளர்ச்சி, வலுவான உட்கட்டமைப்பு, துல்லியமான திட்டமிடல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அரசு காட்டி வரும் தொடர்ச்சியான அக்கறை, மாநிலத்தை உயர்ந்த வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் கூறினார்.

வளர்ச்சி நாயகன் தலைமையில் முன்னெடுக்கப்படும் திராவிட மாடல் 2.0 மூலம், தமிழ்நாடு இன்னும் பல சாதனைகளை படைக்கும் என்றும் நிதியமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் இந்த தொடர்ச்சியான பொருளாதார முன்னேற்றம், மாநிலத்தின் முதலீட்டு சூழல், தொழில் நட்பு கொள்கைகள் மற்றும் நிர்வாக திறனை வெளிப்படுத்துவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ