Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 28 ஏப்ரல் (ஹி.ச.)
இந்திய அஞ்சல் துறையில் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில், பார்சல் சேவையில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக பார்சல்களைப் பெறுபவரின் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து சேர்த்தல்.ரகசிய குறியீடு (OTP) அடிப்படையிலான விநியோக முறை அமல்படுத்தபட்டுள்ளது.
வணிக நோக்கில் பார்சல்கள் அனுப்புவோருக்குத் தபால் நிலையத்திலிருந்து வந்து பெற்றுக்கொள்ளும் (Pickup) வசதியுடன் இந்தியா முழுவதும் பார்சல்களை அனுப்ப ஒரே மாதிரியான கட்டண முறை பின்பற்றப்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட பார்சல்களை இணையதளம் மூலம் எங்குள்ளது (Tracking) என்பதை எளிதாகக் கண்டறியலாம். இந்தியாவிற்குள் மட்டுமன்றி, வெளிநாடுகளுக்கும் பார்சல்களை அனுப்பும் வசதி உள்ளது.
வாடிக்கையாளர்களின் வசதிக்காகத் தலைமை அஞ்சலகங்களில் பிரத்யேகப் பார்சல் பேக்கிங் மையங்கள் செயல்படுகின்றன. அனைத்து கிளை அஞ்சலகங்களிலும் இச்சேவை கிடைக்கிறது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 9841875710 மற்றும் 9791655030 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜி. செந்தில்குமார் அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b