Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 28 ஏப்ரல் (ஹி.ச.)
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த ஜிம் ஸ்ரிவ். அவரது மனைவி ரஜினி. இவர்களது மகள் திவேந்தினி. இவர்கள் 3 பேரும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2023 ஆம் ஆண்டு படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டனர். ஆனால் படகு மூலம் கள்ளத்தனமாக செல்ல வேண்டிய சூழல் நிலவியதால், அவர்களை இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, அந்த பகுதியைச் சேர்ந்த கண்ணன், விஜய், கோபி ஆகிய மூன்று பேரும் 45 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஜிம்ஸ்ரிவ், ரஜினி, திவேதினி ஆகிய மூன்று பேரையும் மண்டபம் கடற்கரை பூங்கா அருகே உள்ள கடற்கரைக்கு வரவழைத்துள்ளனர். நள்ளிரவில் அங்கு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்த எஞ்சின் பொருத்தப்பட்ட பைபர் படகை திருடி, இவர்கள் மூன்று பேரையும் இலங்கையில் இறக்கிவிட்டு வர திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் இருந்து வந்த போலீசார் சந்தேகப்பட்டு இவர்களிடம் விசாரித்ததில் இலங்கைக்கு கள்ளத்தனமாக தப்ப முயன்றது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருந்த மூன்று அகதிகள் மற்றும் அவர்கள் இலங்கை தப்புவதற்கு படகை திருடி ஏற்பாடு செய்த மூன்று பேர் உட்பட ஆறு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN