Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் கொடைக்கானலில் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக குடும்பத்துடன் முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார். கடந்த 2 நாட்களாக நட்சத்திர ஏரி, மனோ ரஞ்சிதம் அணைப் பகுதியில் முதல்வர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார்.
3-வது நாளான இன்று
(ஏப்ரல் 28) காலை நட்சத்திர ஏரி பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார் முதல்வர்.
அப்போது, ஆரோக்கியத்துடன் இருக்க தினமும் ‘வாக்கிங் போங்க…’ என்று பொதுமக்களுக்கு ‘அட்வைஸ்’ செய்தார். அப்போது, பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவருடன் செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
ஏப்ரல் 29 ஆம் தேதி வரை கொடைக்கானலில் தங்கும் முதல்வர் ஸ்டாலின் ஏப்ரல் 30 சென்னை திரும்புவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குடும்பத்துடன் கொடைக்கானல் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி நாளை காலை 11 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் முதலமைச்சர் அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புவதாகக் கூறப்படுகிறது.
முதல்வரின் வருகையை முன்னிட்டு ஏப்ரல் 30 வரை கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன் கேமரா) பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b