அடுத்து சீரடி சாய்பாபா கோவில் - த.வெ.க தலைவர் விஜய்யின் ஆன்மீக பயணம்
சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச.) கடந்த 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நிறுவி நடிகர் விஜய் முதன் முறையாக போட்டியிட்டார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விஜய் மூன்று
அடுத்து  சீரடி சாய்பாபா கோவில் - த.வெ.க தலைவர் விஜய்யின் ஆன்மீக பயணம்


சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச.)

கடந்த 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நிறுவி நடிகர் விஜய் முதன் முறையாக போட்டியிட்டார்.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விஜய் மூன்று அல்லது நான்கு மாவட்டங்கள் சேர்த்து ஒரே இடத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த பிறகு அவர் முதல் முறையாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தார்.

இதற்காக நேற்று நள்ளிரவு தனி விமான மூலம் சென்னையில் இருந்து கிளம்பினார்.

மதுரை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய விஜய் தனி கார் மூலம் மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை பைபாஸ் சாலை மார்க்கமாக திருச்செந்தூர் சென்றார்.

அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு விஜய் வடக்கு வாசல் வழியாக புறப்பட்டு சென்றார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே.4ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆன்மீக பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு தவெக தலைவர் விஜய், சீரடி சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, ‘தி கோட்’ பட ரிலீஸ் மற்றும் தவெகவின் முதல் மாநாடு பணிகளுக்கு நடுவே, சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று விஜய் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது

Hindusthan Samachar / vidya.b