Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 28 ஏப்ரல் (ஹி.ச.)
முன்னாள் தமிழக அமைச்சரும் தவெக நிர்வாகியுமான செங்கோட்டையன் பழனி முருகன் கோயிலுக்கு இன்று சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது,
தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டுள்ளார். தமிழகத்தை ஆளப்போகும் தலைவராக அவர் உருவெடுத்துள்ளார். அவருடைய தொலைநோக்குச் சிந்தனையை மக்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். தமிழகத்தை முன்னிறுத்தி அவர் முன்னெடுக்கும் இந்த அரசியல் பயணம் உலகளவில் கவனிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் ஏற்கனவே பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, இனப் புரட்சி மற்றும் சோசலிசப் புரட்சிகளைக் கண்டுள்ளது. தற்போது நான்காவதாகத் தவெக தலைவர் தளபதியின் 'விசில் புரட்சி' நடைபெறப் போகிறது.வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று அரியணையில் அமரும்
என்று கூறினார்.
மேலும் தவெக வாக்குகளை பிரித்தாலும், ஆட்சி அமைக்க முடியாது என்ற எதிர்கட்சிகள் விமர்சனங்கள் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் பதில் கூறுகையில்,
யார் எத்தகைய கருத்துக்களைக் கூறினாலும் தவெக-வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது, அது வெறும் 'அல்வா' பேச்சுகளாகவே முடியும் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b