வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நாளை சிறப்பு வகுப்பு
சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகம் முழுவதும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. சென்னை மாவட்டத்தில் மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தியாகராய நகர், வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மைய
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நாளை சிறப்பு வகுப்பு


சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது.

சென்னை மாவட்டத்தில் மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தியாகராய நகர், வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது.

வளாகத்தில் 450 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். துணை ராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஆயுத படையினர் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் என நான்கு வகையான போலீஸ் பாதுகாப்பு சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வளாகம் முழுவதும் 210 சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், வேட்பாளர்களின் முகவர்களும் நிலைய கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி காவல் துறை உயர் அதிகாரிகளும் இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வையிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை, கலைவாணர் அரங்கில் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நாளை

(ஏப்ரல் 29) சிறப்பு வகுப்பு நடக்க இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாளை மறுதினம் (ஏப்ரல் 30) ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் பயிற்சி நடைபெறுகிறது.

தபால் வாக்குகள் மற்றும் படிவங்களைப் பராமரிப்பது குறித்து அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b