Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னையிலிருந்து வரும்
மே 1ம் தேதி முதல் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற மலைவாசஸ்தல சுற்றுலா பகுதியான பக்டோக்ரா நகருக்கு, ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் நேரடி விமான சேவையைத் துவங்கவிருக்கிறது.
இந்த விமானம் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தவிர, செவ்வாய் முதல் ஞாயிறு வரை என 6 நாட்களிலும் இயக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையம், டெர்மினல் 4ல் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் மாலை 3.45 மணியளவில் புறப்பட்டு, மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பக்டோக்ரா நகருக்கு மாலை 6.20 மணியளவில் சென்றடைகிறது.
இதேபோல் வாரத்தில் 6 நாட்களும் பக்டோக்ராவில் இருந்து காலை 9.45 மணியளவில் புறப்பட்டு, அன்று மதியம் 12.20 மணியளவில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னைக்கு வந்து சேருகிறது. இந்த விமான சேவை கோடைக்கால சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதே போல் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், தனது கோடைக்கால சிறப்பு அட்டவணைகளின் முதல் பகுதியாக, மேலும் 11 நகரங்களான புனே, மும்பை, கொச்சி, பாட்னா, சண்டிகர், கொல்கத்தா, அகமதாபாத் உள்பட பல்வேறு நகரங்களுக்கு வரும் மே 1ம் தேதி முதல் கூடுதல் விமான சேவைகளையும் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b