Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.
இந்த நிலையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை சேர்ந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இன்று பயிற்சி முகாம் நடத்தியது.
இந்த பயிற்சி முகாமில் தமிழக கூடுதல் தேர்தல் அதிகாரி சிவஞானம் மற்றும் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி & அரசு கூடுதல் செயலாளர் வி.ஸ்ரீதர் மற்றும் இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஸ்ருதஞ்ஜெய் மற்றும் மேனுவல் ராஜ் உள்ளிட்ட முக்கிய தேர்தல் நடந்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சியின் போது வாக்கு எண்ணிக்கை நாள் அன்று தபால் வாக்குகள், வாக்குபதிவு இயந்திரங்கள் ஆகியவற்றில் உள்ள வாக்குகளை எவ்வாறு எண்ண வேண்டும் எனவும் வாக்கு எண்ணும் போது பராமரிக்ககூடிய படிவங்கள் 18, 20, 21 E , 21 C மற்றும் E, 22 உள்ளிட்ட 15 ஆவணங்கள் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும் ஓட்டு எண்ணும் இடத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும்
வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிகளை எவ்வாறு பின்பற்றுவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் உள்ள RO, ARO, DRO என தொகுதிக்கு 4 பேர் வீதம் சுமார் ஆயிரம் பேர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
இன்றயை தினம் பயிற்சி பெறும் அதிகாரிகள் அந்தெந்த மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள பணியாளர்களுக்கு பயிற்சி கொடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் சார்பில் ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா அரங்கில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை குறித்த பயிற்சி வகுப்பும் நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / vidya.b